முந்துங்கள்: 5, 10, 100 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுகிறது ஆர்பிஐ.!

மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திற்குள் பழைய ரூ.5, ரூ.10, ரூ.100 நோட்டுகள் திரும்பபெறப்படும் என்று ரிசர்வ் பேங்க் அறிவித்துள்ளது.

மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திற்குள் பழைய ரூ.5, ரூ.10, ரூ.100 நோட்டுகள் திரும்பப் பெறப்படும் என்று மங்களூரில் இன்று நடைபெற்ற மாவட்ட வங்கிகள் இடையேயான ஆலோசனை கூட்டத்தில் ரிசர்வ் வங்கி உதவி மேலாளர் மகேஷ் தெரிவித்துள்ளார். பழைய 5, 10 மற்றும் 100 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற்று புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்படும் என்று ஆர்பிஐ அறிவித்துள்ளது.

இதையடுத்து, பணமதிப்பிழப்புக்கு பிறகு கடந்த 2019-ஆம் ஆண்டு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஊதா நிற 100 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.10 நாணயத்தை வாங்க பலரும் மறுப்பதால் அதுகுறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றும் ஆர்பிஐ கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்