தனது மகளின் மேலாடை புகைப்படத்தை ட்வீட்டரில் வெளியிட்ட ட்ரம்பின் முன்னாள் ஆலோசகர்!

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் அவர்களின் முன்னாள்  ஆலோசகரான கெல்லியான் கான்வே தனது மகள் கிளாடியாவின் மேலாடை புகைப்படத்தை ட்வீட்டரில் கசிய விட்டுள்ளார்.

 அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் அவர்களின் முன்னாள்  ஆலோசகரான கெல்லியான் கான்வே தனது மகள் கிளாடியாவின் மேலாடை புகைப்படத்தை இணையத்தில் கசிய விட்டதாக புகார் எழுந்துள்ளது. 16 வயதான கிளாடிய பிரபல டிக்டாக் நட்சத்திரம் ஆவார்.

இவர் தனது பெற்றோர்களான கெல்லியன்னே மற்றும் ஜார்ஜ் கான்வே ஆகியோருடன் நீண்ட காலமாக பகைமையில் உள்ளார்.  இந்நிலையில் ஜனவரி 2021-ல் கிளாடியா டிக்டாக் வீடியோக்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வந்தார். இதனால் அவருக்கு பெற்றோர்களுக்கும் இடையேயான பகைமை அதிகரித்தது.

அந்த வீடியோக்களில் கிளாடியா தனது தாயார் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் துன்புறுத்தியதாக  சர்ச்சைக்குரிய குற்றச்சாட்டுகளை முன்வைத்து முன்வைத்துள்ளார். இந்த செயலால் தற்போது இணைய பக்கத்தில் கெல்லியன்னே பல  கடுமையான விமர்சனங்களை எதிர் கொண்டு வருகிறார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.