29 C
Chennai
Wednesday, June 7, 2023

இன்று கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்.!

ஒடிசா ரயில் விபத்தால் ஒத்திவைக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு விழா...

அமெரிக்க பள்ளி பட்டமளிப்பு விழாவில் பயங்கர துப்பாக்கி சூடு.! 7 பேர் சுட்டு கொலை.!

அமெரிக்காவில் பள்ளி பட்டமளிப்பு விழாவில் மர்ம நபர்கள் நடத்திய...

சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூவுக்கு மன்னார்குடியில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூவுக்கு மன்னார்குடியில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என முதல்வர் அறிவிப்பு. 

சிங்கப்பூர் தமிழ் அமைப்புகளின் வரவேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.  அப்போது பேசிய அவர், உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்வது திராவிட இயக்கம்தான். திராவிட இயக்கத்தால் வாழ்ந்த தமிழர்களை காணவே சிங்கப்பூர் வந்துள்ளேன். நான் தமிழ்நாட்டில் இருப்பதாகவே உணர்கிறேன்.

தமிழ் மொழியில் ஏற்படுத்திய சீர்திருத்தத்தை முதன்முதலில் செயல்படுத்தியது சிங்கப்பூர்தான். சிங்கப்பூரை மிகக் குறுகிய காலத்தில் உலகமே வியக்கும் வகையில் முன்னேற்றியவர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ. சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூவுக்கு மன்னார்குடியில் நினைவுச் சின்னமும், அவரது பெயரில் நூலகமும் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்.