ஆட்சி செய்த அரசுகள் பல்வேறு துறைகளில் வளர்ச்சியைக் கவனிக்கவில்லை -பிரதமர் மோடி

மத்திய அரசு மற்றும் அசாம் அரசு  உள்கட்டமைப்பை உருவாக்க ஒத்துழைப்புடன் செயல்படுகின்றது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

இன்று அசாம் மாநிலத்திற்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டுள்ளார். தெமாஜியில் சிலாபத்தர் என்னுமிடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ,பிரதமர் மோடி முக்கிய எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இதன் பின் பிரதமர் மோடி பேசுகையில்,மத்திய அரசு மற்றும் அசாம் அரசு  உள்கட்டமைப்பை உருவாக்க ஒத்துழைப்புடன் செயல்படுகின்றன. மாநிலத்திற்கு பெரும் ஆற்றல் இருந்தபோதிலும், இதற்கு முன் ஆட்சி செய்த அரசுகள் பல்வேறு துறைகளில் வளர்ச்சியைக் கவனிக்கவில்லை. அசாமின் தேநீர், சுற்றுலா, கைத்தறி மற்றும் கைவினைப்பொருட்கள் மாநிலத்தின் தன்னம்பிக்கையை பலப்படுத்தும்.போகிபீல் பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.பிரம்மபுத்திராவில் உள்ள கலியபொமோரா பாலம் அசாமின் இணைப்பை மேம்படுத்தும். நான்கு வழிச்சாலையான தேசிய நெடுஞ்சாலை பணிகளும் நடந்து வருகின்றன.

அசாம் அரசாங்கத்தின் முயற்சிகள் காரணமாக, மாநிலத்தில் 20 க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. புதிய தேசிய கல்விக் கொள்கையை விரைவாக நடைமுறைப்படுத்துவதில் மாநிலமும் செயல்படுகிறது. தேயிலை தொழிலாளர்களின் குழந்தைகள் மற்றும் பழங்குடி மக்களுக்கு பயனளிக்கும் பிராந்திய மொழியில் கல்வியில் தேசிய கல்விக் கொள்கை கவனம் செலுத்துகிறது என்று பேசினார்.