கோவா மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு!

கோவா மாநிலத்தின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சுரேஷ்   அமோன்கர்

By Rebekal | Published: Jul 07, 2020 04:07 PM

கோவா மாநிலத்தின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சுரேஷ்   அமோன்கர் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கேரள மாநிலத்தின் சுகாதாரத்துறையில் முன்னாள் அமைச்சராக இருந்தவர் தான் பாஜகவை சேர்ந்த சுரேஷ் அவர்கள். இவர் 1999 முதல் 2002ஆம் ஆண்டு வரை பாஜக கட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்தவர். இந்நிலையில், உலகம் முழுவதும் பரவி வரக் கூடிய கொரானா வைரஸ் யாரையும் விட்டுவைப்பதில்லை.

இவருக்கும் அந்த கொரானா வைரஸ் தாக்கம் கடந்த ஜூன் 22ஆம் தேதி உறுதி செய்யப்பட்ட நிலையில், சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி முன்னாள் அமைச்சர் சுரேஷ்  அமோன்கர் தற்போது உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு கோவா முதல்வர் பிரமோத் சவந்த் அவர்கள் இரங்கல் தெரிவித்து ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,

Step2: Place in ads Display sections

unicc