37 C
Chennai
Sunday, June 4, 2023

விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக நான் பிரார்த்திக்கிறேன்… போப் பிரான்சிஸ் இரங்கல்.!

ஒடிசா விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார் புனித...

கணவருடன் சண்டை…4 குழந்தைகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்த பெண்.!!

ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் உள்ள 27 வயது பெண்...

திமுக அரசு ஓர் U-Turn அரசு.! அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கடும் விமர்சனம்.!

திமுக அரசு ஓர் U-Turn அரச என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் விமர்சனம் செய்துள்ளார். 

நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று சென்னையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது. அந்த கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் திமுக அரசை கடுமையாக விமர்சித்து இருந்தார்.

அவர் கூறுகையில், தற்போது கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்துள்ளனர் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கள்ளச்சாரா விவகாரம் குறித்து ஆளுநர் கேள்வி எழுப்பினால் முதலவர் பதில் கூற வேண்டும். ஆனால் முதல்வரிடம் பதில் இல்லை. இந்த கள்ளசாராய உயிரிழப்புக்கு திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.

ஒரு அறிவிப்பை அறிவித்து விட்டு. பின்னர் அதிலிருந்து திமுக அரசு பின்வாங்குகிறது. திமுக அரசு U-Turn அரசு என ஜெயக்குமார் ஆளும் திமுக அரசு பற்றி கடுமையாக விமர்சனம் செய்தார்.