ஜெர்மனியில் பீட்சா டெலிவரி செய்யும் ஆப்கானிஸ்தானின் முன்னாள் அமைச்சர்…! வைரலாகும் புகைப்படம்…!

ஜெர்மனியில் பீட்சா டெலிவரி செய்யும் ஆப்கானிஸ்தானின் முன்னாள் அமைச்சர். 

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில், அங்குள்ள அதிகாரிகள் முதல் பொதுமக்கள் வரை அனைவரும் வெளிநாடுகளுக்கு தப்பி செல்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக காபூல் விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியுள்ளனர்.

இந்நிலையில் 2018- ஆம் ஆண்டு சையது அகமது ஷா சதத் ஆப்கானிஸ்தானில் அஷ்ரப் கனி அமைச்சரவையில் கேபினட் அமைச்சராக பதவி வகித்தார். இதனையடுத்து, கடந்த 2020-ஆம் ஆண்டு கருது வேறுபாடு காரணமாக, பதவியில் இருந்து விலகி, அவர் ஜெர்மனி நாட்டிற்கு சென்றார். தற்போது அவர் லீபிஜித்தில் பீட்சா டெலிவரி செய்யும் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

இவர் ஆரஞ்சு நிற உடை அணிந்து, முதுகில் உணவு பையுடன் சைக்கிளில் செல்லும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.  இவர் பீட்சா டெலிவரி செய்யும் புகைப்படத்தை ஜெர்மனியின் அல்-ஜசீரா என்ற தொலைக்காட்சியும் மற்றும் சில மீடியாக்கள் வெளியிட்டு உள்ளனர்.

 தனது இந்த நிலை குறித்து, சையது அகமது ஷா சதத் கூறுகையில், ஆசிய மற்றும் அரபு நாடுகளில் உயர்மட்ட மக்கள் தங்கள் வாழ்க்கையை வாழும் விதத்தை மாற்ற அவரது கதை ஒரு ஊக்கியாக செயல்படும் என்றும், ஒருமுறை பாதுகாப்பு பணியாளர்களால் சூழப்பட்ட சைக்கிள் இப்போது பீட்சாவை வழங்கி வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் கைப்பற்றியது குறித்து அவர் கூறுகையில், அஷ்ரப் கனி ஆட்சி இவ்வளவு விரைவாக வீழ்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.