அசாமில் ஒரு வயதுடைய பெண் காண்டாமிருக குட்டியை பத்திரமாக மீட்ட வனத்துறையினர்.!

அசாமின் தாகான் கிராமத்தில் இருந்து ஒரு வயதுடைய ஒரு பெண் காண்டாமிருக குட்டியை வனத்துறையினர் மீட்டனர்.

காசிரங்கா தேசிய பூங்கா மற்றும் சி.டபிள்யூ.ஆர்.சி குழு இன்று காலை காசிரங்கா பகுதியை சுற்றியுள்ள அசாமின் தாகான் கிராமத்தில் இருந்து ஒரு வயதுடைய ஒரு பெண் காண்டாமிருக குட்டியை மீட்டனர்.

அஸ்ஸாம் வனத்துறை மற்றும் இந்திய வனவிலங்கு அறக்கட்டளை  ஆகியவற்றின் கூட்டாக நடத்தப்படும் வனவிலங்கு பராமரிப்பு வசதியான வனவிலங்கு மறுவாழ்வு மற்றும் பாதுகாப்பு மையத்தில்  இந்த காண்டாமிருக குட்டி கண்காணிக்கப்படுகிறது.

இதற்கிடையில் 50% பரப்பளவு நீரில் மூழ்கியுள்ளதால் இந்த பூங்கா மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது மற்றும் வனத்துறை அறிக்கையின்படி, இந்த வெள்ள பருவத்தில் மொத்தம் 151 விலங்குகள் உயிரிழந்தது.

அசாமில் இதுவரை ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் மொத்தம் 112 பேர் உயிரிழந்துள்ளனர். அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின்படி, 4 மாவட்டங்கள் வெள்ளநீரின் கீழ் மூழ்கியுள்ளது.

 40 கிராமங்களில் மொத்தம் 29603 மக்களும் 3056 ஹெக்டேர் நிலங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 3015 பெரிய விலங்குகள், 1780 சிறிய விலங்குகள் மற்றும் 1974 கோழிகள்  பாதிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய தகவல் படி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் தேமாஜி பக்ஸா. ஆறு நிவாரண முகாம்கள் உள்ளன அந்த நிவாரண முகாம்களில் இதுவரை 62 பேர் உள்ளனர்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.