வெளிநாட்டு மாணவர்களின் விசா ரத்து – ஹார்வர்டு பல்கலைக்கழக வழக்கு.!

ஆன்லைன் முறைக்கு மாறும் பல்கலைக்கழக மாணவர்களின் விசா ரத்தை எதிர்த்து அங்குள்ள கோர்ட்டில் ஹார்வர்டு பல்கலைக்கழகம் வழக்கு தாக்கல் செய்துள்ளது.

அமெரிக்காவில் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரசால் 30 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு பாதிக்கப்ட்டுள்ளனர். மேலும்,  1 லட்சத்துக்கும் அதிகமானார் உயிரிழந்து உள்ளனர். கொரோனா வைரஸ் காரணமாக அமெரிக்காவில்  கல்லூரிககள், பள்ளிகள் திறக்கமுடியாத முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், பல பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் ஆன்லைன் மூலம் வகுப்புகளை தொடங்கி உள்ளன.

இதைத்தொடர்ந்து உலகப்புகழ் பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகம், இலையுதிர் காலத்துக்கு அனைத்து வகுப்புகளையும் ஆன்லைனில் நடத்தப்போவதாக கடந்த திங்கட்கிழமை அறிவித்தது.  ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் இந்த அறிவிப்பு, அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.

அமெரிக்காவில் ஆன்லைன் வகுப்புக்கு மாறும் பல்கலைக் கழகங்களில் படித்து வரும் வெளிநாட்டு மாணவர்களின் விசாக்கள் ரத்து செய்யப்படும் என டிரம்ப் நிர்வாகம்  அதிரடி அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பு அமெரிக்காவில் படித்து வருகிற வெளிநாட்டு மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டு மாணவர்களில் 4 பங்கில் 3 பங்கு மாணவர்கள் ஆசியா கண்டத்தை சேர்ந்தவர்கள். அதிலும் குறிப்பாக இந்தியர்கள் 26 %பேரும் , சீனர்கள் 48 %பேரும் அடங்குவர். இந்நிலையில், ஆன்லைன் முறைக்கு மாறும் பல்கலைக்கழக மாணவர்களின் விசா ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பை எதிர்த்து ஹார்வர்டு பல்கலைக்கழகமும், எம்.ஐ.டி. என்று அழைக்கப்படுகிற மசாசூசெட்ஸ் தொழில் நுட்ப கல்வி நிறுவனமும் பாஸ்டன் மாவட்ட கோர்ட்டில் வழக்குகளைதொடர்ந்துள்ளன.

இந்த வழக்குகளில், டிரம்ப் நிர்வாக விசா முடிவுக்கு எதிராக தற்காலிக தடை உத்தரவு அல்லது  நிரந்தர தடை விதிக்க கோரி வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்குகள் விரைவில் விசாரணைக்கு வர உள்ளன. விசாரணையின் போது விசா ரத்து அறிவிப்புக்கு தடை விதிக்கப்படுமா..? அல்லது ரத்து செய்யப்படுமா..? என்பது தெரியவரும்.

author avatar
murugan