சசிகலா மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்கு தள்ளி வைப்பு !

ஜெ .ஜெ தொலைக்காட்சி நிறுவனத்திற்கு வெளிநாட்டில் இருந்து  எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வாங்கியது தொடர்பாக சசிகலா மற்றும் சசிகலா சகோதரி மகன் மீது அமலாக்க பிரிவு அதிகாரிகள் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அன்னிய செலாவணி மோசடி வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் இருவரின் மீது குற்றச்சாற்று பதிவு செய்யப்பட்டது.பின்னர் அமலாக்கதுறை சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.இந்நிலையில் சசிகலா நேரில் ஆஜராக வேண்டும் என பெங்களூர் சிறைத்துறை அதிகாரிகளுக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு விட்டது.

இந்த உத்தரவு எதிர்த்து சசிகலா சென்னை உயர்நிதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் காணொலி மூலமாக அடுத்தகட்ட விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவு விட்டது.

இந்நிலையில் நேற்று இந்த வழக்கு நீதிபதி ஹெர்மிஸ் முன்னிலையில் வந்தது.காணொலி காட்சி விசாரணை தொடர்பாக சில விளக்கங்களை தெளிவுப்படுத்த கோரி எழும்பூர் நீதிமன்ற நீதிபதி உயர்நீதிமன்றத்திற்கு கடிதம் எழுதினார்.அந்த கடிதம் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் கடிதம் நிலுவையில் உள்ள காரணமாகவும் ,நேற்று அமலாக்கதுறை சாட்சி ஆஜராகாத காரணத்தினாலும் வழக்கை வருகின்ற 24-ம் தேதி நீதிபதி தள்ளி வைத்தார்.

author avatar
murugan