பிசாசு-2 திரைப்படத்தில் நெற்றிக்கண் பிரபலம்.! யார் தெரியுமா.?

மிஷ்கின் இயக்கி வரும் பிசாசு-2 திரைப்படத்தில் நடிகர் அஜ்மல் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

இயக்குனர் மிஸ்கின் கடந்த 2011-ம் ஆண்டு இயக்கத்தில் வெளியான பிசாசு. திகில் நிறைந்த கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில், வசூல் ரீதியிலும், விமர்சன ரீதியிலும் பலத்த வரவேற்பை பெற்றது. நல்ல வசூல் சாதனையும் செய்தது.

முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் மிஷ்கின் பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். இந்த பிசாசு -2 படத்தில் கதாநாயகியாக நடிகை ஆண்ட்ரியா நடிக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது. இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. படப்பிடிப்பு தற்போது விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்த  திரைப்படத்தில் நடிகர் அஜ்மல் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. அஜ்மல் நயன்தாரா நடிப்பில் வெளியான நெற்றிக்கண் திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.