#Breaking:மருமகனுக்கு முக்கிய பதவி – மம்தா பானர்ஜி அதிரடி…!

#Breaking:மருமகனுக்கு முக்கிய பதவி – மம்தா பானர்ஜி அதிரடி…!

  • திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கு,
  • மருமகன் அபிஷேக் பானர்ஜியை,மம்தா நியமித்துள்ளார்.  

மேற்கு வங்க மாநிலத்தில்,சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியானது வெற்றி பெற்று,அக்கட்சியின் தலைவரான மம்தா பானர்ஜி, தொடர்ந்து மூன்றாவது முறையாக முதல்வர் பதவியை ஏற்றார்.

இதனையடுத்து,மேற்கு வங்க முதல்வர் மம்தாவிற்கும்,மத்திய அரசுக்கும் இடையே கடும் மோதல் நீடித்து வருகிறது.

இந்நிலையில்,திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் உள்ளிட்ட இரண்டு முக்கிய கூட்டங்கள் நேற்று நடைபெற்றது.அந்தக் கூட்டத்தின்போது,கட்சியில் சில அதிரடி மாற்றங்களை முதல்வர் மம்தா பானர்ஜி செய்துள்ளார்.

அதன்படி,திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராக,தனது சகோதரரின் மகனும்,எம்.பி,யுமான அபிஷேக் பானர்ஜியை மம்தா நியமித்துள்ளார்.

மேலும்,கட்சியில் ஒருவருக்கு ஒரு பதவிதான் என்ற முறை இருப்பதால்,அபிஷேக் பானர்ஜி வகித்து வந்த இளைஞர் அணி தலைவர் பதவியானது நடிகை சயோனி கோஷ்க்கு வழங்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து,ககோலி கோஷ் தஸ்திதார் மகளிர் அணி தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.மேலும்,கலாசார பிரிவு தலைவராக திரைப்பட இயக்குனர் ராஜ் சக்கர வர்த்தி,மாநில பொதுச் செயலராக குணால் கோஷ்,விவசாய அணி தலைவராக புர்னேந்து போஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல்,திரிணாமுல் கட்சியிலிருந்து பாஜகவிற்கு சென்ற முகுல்ராய் உட்பட பலரையும் கட்சியில் சேர்க்க மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Join our channel google news Youtube