கடந்த 30 ஆண்டுகளாக பா.ம.க. வலியுறுத்தி வருகிறது -ராமதாஸ்

736 அணைகளை ரூ.10,000 கோடியில் மேம்படுத்தும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பது வரவேற்கத்தக்கது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 736 அணைகளில், ரூ. 10,211 கோடி மதிப்பீட்டில் அணை புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.இத்திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் 59 அணைகள் புனரமைக்கப்பட உள்ளது.அடுத்த 10 ஆண்டுகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,தமிழ்நாட்டில் 59 அணைகள் உட்பட 736 அணைகளை ரூ.10,000 கோடியில் மேம்படுத்தும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பது வரவேற்கத்தக்கது. உலகில் அதிக அணைகள் உள்ள மூன்றாவது நாடான இந்தியாவில் அணைகள் மேம்படுத்தப்படுவது பாசன வசதியை பரவலாக்கும்.நீர் மேலாண்மை சிறப்பாக அமைய வேண்டும்; அனைத்து பெரிய ஆறுகளிலும் 5 கி.மீக்கு ஒரு தடுப்பணை கட்டப்பட வேண்டும் என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடு. இதைத் தான் சட்டப்பேரவைக்கு உள்ளேயும், வெளியேயும் கடந்த 30 ஆண்டுகளாக பா.ம.க. வலியுறுத்தி வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

Recent Posts

நிறைவடைந்தது தேர்தல் நேரம்…! டோக்கன் கொடுத்து வாக்குப்பதிவு தீவிரம்….!

Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும்…

22 mins ago

துப்பாக்கிச்சூடு… EVM மிஷின் சேதம்… முடிந்தது மணிப்பூர் முதற்கட்ட தேர்தல்.!

Election2024 : மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உள் மற்றும் வெளி மணிப்பூர் என இரு மக்களவை தொகுதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு…

26 mins ago

ரிஷப் பண்ட் பார்ம் எப்படி இருக்கு? ஜாகீர் கான் சொன்ன பதில்!

Rishabh Pant : ரிஷப் பண்ட்  சமீபத்திய பார்ம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு  ஜாகீர் கான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ்…

29 mins ago

இறுதி கட்டத்தை எட்டும் வாக்குப்பதிவு… தற்போதைய நிலவரம் என்ன?

Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது வாக்குப்பதிவு. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மாட்ரிம் புதுச்சேரியில் இன்று காலை…

55 mins ago

10th படிச்சுருக்கீங்களா ? அப்போ புலனாய்வுத்துறையில் இந்த வேலை உங்களுக்கு தான் ?

IB Recruitment 2024 : உள்துறை அமைச்சகம் - உளவுத்துறை பணியகம் (IB) தற்போது மொத்தம் 660 காலியிட பணிகளுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உள்துறை மற்றும் உளவுத்துறை பணியகத்தில்…

1 hour ago

படமே இல்லாத நயன்தாராவுக்கு பம்பர் வாய்ப்பு?

Nayanthara : பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் நயன்தாராவுக்கு பாலிவுட்டில் படம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளதாக தகவல். நயன்தாராவின் மார்க்கெட் இப்போது எப்படி இருக்கிறது என்பது…

1 hour ago