நடிகர் கமலஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் இரண்டு சீசன்களை நடத்தி முடித்துள்ளார். இந்த இரண்டு சீசன் நிகழ்ச்சிகளும் பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பான நிலையில், மக்கள் மத்தியில் இந்த நிகழ்ச்சி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், வரும் 23-ம் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சிகள் துவங்கவுள்ள நிலையில், விஜய் டெலிவிஷன் தனது ட்வீட்டர் பக்கத்தில், வருகிற 23-ம் தேதி இரவு 8 மணிக்கு ஆரம்பம் ஆகுது என பதிவிட்டுள்ள நிலையில், அந்த பதிவிற்கு, ஒரு ரசிகர் பழைய “டைமிற்கே மாத்திருங்க சார். அது என் பெஞ்சாதி சீரியல் பாக்குற நேரம்.” என்று கமெண்ட் செய்துள்ளார்.