கடந்த 6 மாதங்களாக மத்திய அரசு மேற்குவங்கத்தை கைப்பற்ற நினைத்ததை தவிர வேறு எதையும் செய்யவில்லை – மம்தா

மேற்குவங்கத்தை கைப்பற்ற விரும்பியதை தவிர வேறு எந்த வேலையும் மத்திய அரசு செய்யவில்லை என்று முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சனம்.

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து 3வது முறையாக மீண்டும் ஆட்சியைப் கைப்பற்றி அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி மீண்டும் முதல்வராகப் பதவியேற்றுள்ளார். இந்த நிலையில், முதல் சட்டசபையில் பேசிய முதல்வர் மம்தா, மேற்கு வங்கத்தில் ஆட்சியை அமைக்க வேண்டும் என்ற முயற்சியில், மத்திய பாஜக அரசு தலைவர்கள் இந்தியாவையே ஒட்டுமொத்தமாக அழிவின் விளிம்பிற்குத் தள்ளியுள்ளனர்.

கடந்த ஆறு மாதங்களாகவே மத்திய பாஜக அரசு தலைவர்கள் நாட்டிற்காக எந்த வேலையும் செய்யவில்லை, எப்படியாவது மேற்குவங்கத்தில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என அவர்கள் அடிக்கடி வருகை தந்து இங்கு முகாமிட்டிருந்தனர். இருப்பினும், அவர்களால் இங்கு ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை என்றார். இங்கு கவனம் செலுத்தியதால் நாட்டிற்கான வேலையில் அவர்கள் கவனம் செலுத்தவில்லை என விமர்சித்துள்ளார்.

மேலும், இந்த இக்கட்டான சூழலில் மத்திய விஸ்டா திட்டத்தில், புதிய நாடாளுமன்றம் கட்டடம், பிரதமர் இல்லம் அமைப்பது என ஆகியவற்றிற்கு சுமார் 50,000 கோடி ரூபாய் செலவிடுகிறார்கள். ஆனால், கொரோனா தடுப்பூசிக்கு முன்னுரிமை அளிக்கவில்லை, எதற்கு ஆர்வம் காட்டுவது, எதற்கு காட்ட கூடாது என்று தெரியாமல், செயலிழந்த நிர்வாகமாக மத்திய அரசு உள்ளது என குற்றசாட்டியுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்