தமிழக சட்டமன்றத்தில் முதல் முறையாக இன்று நீர்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம்..!

தமிழக சட்டமன்றத்தில் முதல் முறையாக நீர்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெறவுள்ளது.

சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்து பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன.அந்த வகையில்,பொதுப் பணித்துறையில் இருந்து நீர்வளத்துறை தனியாக பிரிக்கப்பட்டு,அத்துறையின் அமைச்சராக துரைமுருகன் அவர்கள் நியமிக்கப்பட்டார்.

அதன்படி,அணைகள்,ஆறுகள்,ஏரி மற்றும் குளங்கள் போன்ற நீர் ஆதாரங்களின் வளத்தை பெருக்கும் பணிகள் நீர்வளத்துறையின் கீழ் வருகின்றன.

இந்நிலையில்,முதல்முறையாக நீர்வளத்துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் தமிழக சட்டப் பேரவையில் இன்று விவாதிக்கப்படவுள்ளது. அப்போது,நீர்வளத்துறையின் மானியக் கோரிக்கை தொடர்பாக முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.