மக்களின் கவனத்திற்கு.! வெறும் 50 ரூபாய்க்கு 12 வகையான மருத்துவ பரிசோதனைகள்.!

  • சென்னையில் 46-ஆவது சுற்றுலா மற்றும் வா்த்தகக் கண்காட்சியை தீவுத் திடல் மைதானத்தில் அண்மையில் நடைபெற்று வருகிறது.
  • அதில் சுகாதாரத்துறை சார்பாக வெறும் 50 ரூபாய்க்கு 12 வகையான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

சென்னையில் 46-ஆவது சுற்றுலா மற்றும் வா்த்தகக் கண்காட்சியை தீவுத் திடல் மைதானத்தில் அண்மையில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தொடக்கி வைத்தாா்.இதில் துறை வாரியாக அரங்குகள் அமைத்து துறை சார்ந்த புரிதல்கள் ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுருக்கிறது.

அதில், சுகாதாரத்துறை சார்பாக ஏற்படுத்தப்பட்டு உள்ள பிரத்யேக அரங்கில், மருத்துவக் கல்வி, தொழு நோய், காச நோய், புகையிலை தடுப்பு, பாரம்பரிய மருத்துவம் குறித்த விரிவான விளக்கங்கள் எளிமையாக புரியும் வகையில் உள்ளன. குறிப்பாக, அம்மா முழு உடல் பரிசோதனை மையமும் செயல்பட்டு வருகின்றது. இந்தப் பரிசோதனைகளுக்காக அமெரிக்காவில் இருந்து மருத்துவ சாதனங்கள்  இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

அதில் வெறும் 50 ரூபாய்க்கு 12 வகையான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. உடல் வெப்ப நிலை, இரத்த அழுத்தம், இதய துடிப்பு, உடல் பருமன், இரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு, எடை, உயரம், உடல் பருமன் குறியீடு, ரத்த அணுக்கள் எண்ணிக்கை, சர்க்கரை அளவு, பார்வை திறன் உள்ளிட்ட பரிசோதனைகள் சில நிமிடங்களில் மேற்கொள்ள படுகின்றது.

இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: முழு உடல் பரிசோதனை அரங்கில் ரத்த அணுக்களின் அளவு, ரத்த சா்க்கரை அளவு ஆகியவை ரத்த மாதிரிகளைக் கொண்டு பரிசோதிக்கப்படுகின்றன. மேலும், உடனடியாக முடிவுகள் தெரிவிக்கப்பட்டு, அதற்கு உரிய மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன. சுற்றுலா கண்காட்சிக்கு செல்வோர் மறக்காமல் சுகாதாரத்துறை அரங்கிற்கு சென்று குறைந்த செலவில் இந்த பரிசோதனைகளை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Recent Posts

மாற்றத்துடன் பேட்டிங் களமிறங்கும் சென்னை அணி !! பந்து வீச தயாராகும் லக்னோ !!

ஐபிஎல் 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ…

1 hour ago

நிறைவடைந்தது தேர்தல் நேரம்…! டோக்கன் கொடுத்து வாக்குப்பதிவு தீவிரம்….!

Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும்…

2 hours ago

துப்பாக்கிச்சூடு… EVM மிஷின் சேதம்… முடிந்தது மணிப்பூர் முதற்கட்ட தேர்தல்.!

Election2024 : மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உள் மற்றும் வெளி மணிப்பூர் என இரு மக்களவை தொகுதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு…

2 hours ago

ரிஷப் பண்ட் பார்ம் எப்படி இருக்கு? ஜாகீர் கான் சொன்ன பதில்!

Rishabh Pant : ரிஷப் பண்ட்  சமீபத்திய பார்ம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு  ஜாகீர் கான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ்…

2 hours ago

இறுதி கட்டத்தை எட்டும் வாக்குப்பதிவு… தற்போதைய நிலவரம் என்ன?

Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது வாக்குப்பதிவு. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மாட்ரிம் புதுச்சேரியில் இன்று காலை…

2 hours ago

10th படிச்சுருக்கீங்களா ? அப்போ புலனாய்வுத்துறையில் இந்த வேலை உங்களுக்கு தான் ?

IB Recruitment 2024 : உள்துறை அமைச்சகம் - உளவுத்துறை பணியகம் (IB) தற்போது மொத்தம் 660 காலியிட பணிகளுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உள்துறை மற்றும் உளவுத்துறை பணியகத்தில்…

3 hours ago