வடகொரியாவில் உணவு பஞ்சம் : 2025 வரை குறைவாக உண்ண உத்தரவு!

வடகொரியாவில் உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளதால், 2025 வரை குறைவாக உணவு உண்ண வேண்டும் என அந்நாட்டு அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக வட கொரியா நாடு பிற நாடுகளுடன் எல்லைக்கு சீல் வைத்து கொண்டது. மேலும், உணவுப் பொருட்கள் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக சார்ந்திருந்த சீன எல்லையையும் வடகொரியா மூடியது. இதனால் வட கொரியாவில் உணவுப் பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக ஒரு கிலோ வாழைப்பழம் இந்திய மதிப்பில் 3,300 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

எனவே வட கொரிய மக்கள் மிகக் கடுமையான உணவுப் பஞ்சத்தில் தவித்து வருகின்றனர். இதன் காரணமாக 2025 ஆம் ஆண்டு வரை நாட்டு மக்கள் குறைவாக உண்ணும் பழக்கத்தை கடைபிடிக்கவேண்டும் என அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் உன் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். ஆனால் இதற்கு உலக நாடுகள் பல கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், தற்பொழுது வட கொரியாவில் உள்ள நிலையைப் பொறுத்தவரை, குளிர்காலத்தினை கூட கடக்க முடியாத அளவுக்கு கடுமையான உணவு பஞ்சம் இருப்பதாகவும், இந்நிலையில் எப்படி 2025 வரை குறைவாக உண்ண முடியும் எனவும் நாட்டு மக்கள் தங்கள் தவிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

author avatar
Rebekal