ட்வீட்டரை தொடர்ந்து அதிபர் ட்ரம்பின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கம் முடக்கம்! காரணம் என்ன?

ட்வீட்டரை தொடர்ந்து அதிபர் ட்ரம்பின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கம் முடக்கம்! காரணம் என்ன?

தேர்தல் குறித்து வன்முறையை தூண்டும் வகையில் பதிவுகளை பதிவிட்டதால், அதிபர் டொனால்டுட்ரம்பின் சமூக வலைதளப் பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் நவம்பர் 3-ம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிக வாக்குகளை பெற்று அதிபர் டிரம்பை பின்னுக்குத்தள்ளி  ஜோ பைடன் அவர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தேர்தல் குறித்து வன்முறையை தூண்டும் வகையில் டிரம்ப் அவர்கள் இணைய பக்கத்தில் பதிவுகளை பதிவிட்டு இருந்தார்.

மேலும் இவரது அதிகாரப்பூர்வ தனிப்பட்ட ட்வீட்டர் பக்கமான @realtonaldtrump பக்கத்தில் இருந்து சில ட்வீட்டுகள் செய்திருந்தார். இந்த ட்விட்கள் வன்முறையை தூண்டும் வகையில் இருந்ததால், அவற்றை டுவிட்டர் நிறுவனம் உடனடியாக நீக்கியது. மேலும், விதிமுறைகளை மீறியதற்காக அவரது டுவிட்டர் பக்கத்தை ட்வீட்டர் நிறுவனம் தற்காலிகமாக முடக்கியுள்ளது.

அடுத்த 12 மணி நேரத்திற்கு ட்விட்டர் பக்கத்தை பயன்படுத்த முடியாத நிலைக்கு ட்விட்டர் நிறுவனம் முடக்கியது. மேலும் தேர்தல் தொடர்பான தவறான தகவல்களை பரப்பினால் அவரின் ட்விட்டர் பக்கம் நிரந்தரமாக நீக்கப்படும் என நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் அதிபர் டொனால்டு டிரம்ப்-ன் இன்ஸ்டாகிராம் மற்றும் முகநூல் கணக்குகளும் 24 மணி நேரத்துக்கு முடக்கப்பட்டுள்ளது. வன்முறையை தூண்டும் வகையில் பதிவுகளை பதிவிட்டதால், இவரது சமூக வலைதளப் பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube