இம்ரான் கான் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து பாகிஸ்தான் பஞ்சாபில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.
ஊழல் வழக்கில் இஸ்லாமாத் நீதிமன்றத்தில் நேற்று (மே 9) ஆஜராக வந்த பாகிஸ்தான் முன்னாள் முதல்வர் இம்ரான் கானை நீதிமன்ற வளாகத்தில் அறை கண்ணாடி உடைத்து பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.இதனால் பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் 144 தடை விதிக்கப்பட்டு பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இருந்தும் இம்ரான்கான் ஆதரவாளர்கள் மேற்கொள்ளும் பதற்றத்தை முழுதாக குறைக்க முடியவில்லை. கல்வீச்சு, பொதுச்சொத்துக்கள் சேதம் என இதுவரை 130க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்துள்ளனர்.
இதனால், பாகிஸ்தானில் வன்முறையினை கட்டுப்படுத்த பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, பஞ்சாப் மற்றும் கைபர் பக்துன்க்வா மாகாணங்களில் வன்முறையை கட்டுப்படுத்த ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.