,
puducherry

மக்களே உஷார்…புதுச்சேரியில் வெப்பநிலை அதிகரிக்கும்…வானிலை மையம் தகவல்.!!

By

புதுச்சேரியில் மிதமான மழை பெய்யும் எனவும் ஒருசில இடங்களில் இயல்பிலிருந்து வெப்ப நிலை அதிகரிக்கும் எனவும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

புதுச்சேரி வானிலை நிலவரம் 

மழை 

  • தமிழக பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று முதல் வரும் 10-ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வெயில் 

  • ஏற்கனவே புதுச்சேரியில் வெயில் மக்களை வாட்டிவதைத்து வரும் நிலையில், இன்று (6.6.2023) மற்றும் நாளை (7.6.2023) ஆகிய நாட்களில் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் ஒருசில இடங்களில் இயல்பிலிருந்து 2 -4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

புதிய புயல் நிலவரம் 

  • நேற்று (05.06.2023)  தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது இன்று (06.06.2023) காலை மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அதே இடத்தில் நிலவுகிறது. இது வடக்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் புயலாக வலுபெறக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இந்த செய்தியையும் படியுங்களேன்- எச்சரிக்கை.! முடிந்தது கத்தரி வெயில்…இனிமேல் வெப்ப அலை வீசும் – வானிலை ஆய்வு மையம்.!

Dinasuvadu Media @2023