ஹாலாந்தில் பூத்து குலுங்கும் வண்ண துலிப் மலர்கள்

6

ஹாலாந்தில்  கண்களை கவரும் வண்ண துலிப் மலர்கள் பூத்து குலுங்குகின்றன.

ஹாலாந்தில் உள்ள பிரபல பூங்காவான, கியூகென்ஃஹோப் பூங்காவில் பல வண்ணங்களில் கண்களை கவரும் துலிப் மலர்கள் பூத்து குலுங்குகின்றன. பொதுவாக மார்ச் இறுதி வாரம் முதல் மே மாதம் வரை கண்களை கவரும் வண்ணம் இந்த பூக்கள் பூத்துக்குலுங்குவது வழக்கம்.

இந்த மலர்கள், 32 ஹெக்டேர் பரப்பளவில் 7 மில்லியனுக்கு அதிகமாக வளர்க்கப்பட்டுள்ளது. இந்த மலர்களை பார்த்து ரசிக்க சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.