என் தம்பி தனுஷ் சிங்கம்.! செல்வராகவனின் நெகிழ்ச்சி ட்வீட்.!

தமிழ் சினிமாவில், தனுஷ் -செல்வராகவன் கூட்டணிக்கு எப்போதும் தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. இவர்களது கூட்டணியில் வெளியான துள்ளுவதோ இளமை, காதல்கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்கள் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு இவர்களது கூட்டணியில் உருவாகும் திரைப்படம் நானே வருவேன். இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை இந்துஜா நடித்து வருகிறார். இசையமைப்பாளர் யுவன் இசையமைத்து வருகிறார். படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி தயாரிக்கிறார்.

 

இந்த படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறு விறுப்பாக ஊட்டியில் நடைபெற்று வருகிறது. இன்னும் 10 நாட்களில் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும் என கூறப்படுகிறது.இதற்கிடையில் தனுஷ் குறித்து செல்வராகவன் நெகிழ்ச்சியாக ட்வீட் ஒன்றை செய்துள்ளார்.

அதில் “நாங்கள் இருவரும் நீண்ட காலமாக எங்களுடைய சொந்தப் படங்களில் பிஸியாக இருந்ததால், ஒருவரோடொருவர் அதிகமாக நேரத்தைச் செலவிடும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைக்கவில்லை. நானே வருவேன் படத்தின் மூலமாக இந்த பொன்னான வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. தனுஷ் என்ற இந்த மனிதர் தங்கமான மனம் கொண்ட சிங்கம்” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.