அத்தாரி வாகா எல்லையில் நடைபெற்ற கொடி இறக்கும் சடங்கு!

இன்று 72 வது குடியரசு தினத்தை முன்னிட்டு அத்தாரி வாகா எல்லையில், கூடியிருந்த பொதுமக்கள் முன்னிலையில் கொடி இறக்கும் சடங்கு நடைபெற்றுள்ளது.

இன்று 72 வது குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டின் பல பகுதிகளிலும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு, குடியரசு தினம் விமரிசையாக கொண்டாடப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக சில கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும் வழக்கம் போல பல இடங்களிலும் கொடிகள் ஏற்றப்பட்டு குடியரசு தினத்தை மக்கள் கொண்டாடினர். இந்நிலையில் குடியரசு தினத்தின் ஒரு பகுதியாக இந்தியா பாகிஸ்தான் நாடுகளின் தேசிய கொடி இறக்கும் நிகழ்ச்சி அத்தாரி வாகா எல்லையில் தற்பொழுது நடைபெற்று உள்ளது.

இந்த நிகழ்வு இரு நாட்டின் கொடிகளையும் சூரிய அஸ்தமனத்திற்கு முன்பதாக கொடிகளில் இருந்து கீழே இறக்கும் நிகழ்வாகும். தற்பொழுது நடைபெற்ற இந்த நிகழ்வில் இரு நாட்டு வீரர்களின் அணிவகுப்பு நடைபெற்றுள்ளதுடன், ஏராளமான பொதுமக்களும் பங்கேற்றனர். சூரியன் மறைவதற்கு முன்பதாக நடத்தப்பட்ட இந்த கொடி இறக்கும் நிகழ்ச்சியில் ராணுவ வீரர்களின் அணிவகுப்புடன் இரு நாட்டு ராணுவ வீரர்களும் தங்களது நாட்டு கொடிகளை இறக்கும் நிகழ்ச்சி நடைபெற்று முடிந்துள்ளது.

author avatar
Rebekal