முத்தலாக் தடை சட்டத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்த பெண்

முத்தலாக் தடை சட்டத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்த பெண்

கேரளாவை சேர்ந்த நூர்பினா ரஷீத் (Noorbina Rasheed)  உச்சநீதிமன்றத்தில் முத்தலாக் தடை சட்டத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார்.

கடந்த 2017-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு ஒன்றை அளித்தது.அதாவது முஸ்லீம் பெண்களிடம் அவர்களது கணவர்கள் தலாக் என்று மூன்று முறை தொடர்ந்து கூறி விவாகரத்து செய்யும் நடைமுறை செல்லாது என்று தீர்ப்பில் தெரிவித்தது.ஆனால் இதனை தொடர்ந்தும் நாட்டில் பல இடங்களிலும் முத்தலாக் மூலமாக விவாகரத்து செய்வது இருந்து வந்தது.

இதனையடுத்து தான் மத்திய அரசு முதலாக தடை சட்டத்தை கொண்டு வர முடிவு செய்தது.அதன்படி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் முத்தலாக் தடை சட்டம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றமும் செய்யப்பட்டது. இந்த சட்டத்திற்கு குடியரசு தலைவரும் ஒப்புதல் அளித்த நிலையில் சட்டமும் அமல்படுத்தப்பட்டது.மேலும் இந்த சட்டத்தை மீறி இஸ்லாமிய பெண்களுக்கு அவர்கள் கணவர்கள் முத்தலாக் கூறி விவாகரத்து செய்தால்  3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும்  என்று தெரிவிக்கப்பட்டது.

இதற்கு இடையில் தான்  இந்த கேரளாவை சேர்ந்த நூர்பினா ரஷீத் (Noorbina Rasheed)  உச்சநீதிமன்றத்தில் முத்தலாக் தடை சட்டத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார்.இந்த சட்டத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்த முதல் பெண் ஆவார்.

Join our channel google news Youtube