Thursday, November 30, 2023
Homeஇந்தியாஉத்தரகண்ட் சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்கள்.! வெளியான முதல் வீடியோ.! 

உத்தரகண்ட் சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்கள்.! வெளியான முதல் வீடியோ.! 

உத்தரகண்ட் மாநிலத்தில் உத்தரகாசியில், பிரம்மகால் – யமுனோத்ரி நெடுஞ்சாலை பகுதியில், சில்க்யாரா – தண்டல்கான் பகுதிக்கு இடையே சுரங்கபணிகள் நடைபெற்று வந்தன.

இந்த சுரங்கமானது கடந்த 12ஆம் தேதி விபத்துக்குள்ளானது. இதில் அந்த சமயம் சுரங்க பணியில் ஈடுபட்ட வந்த தொழிலாளர்கள் 41 பேர் வெளியில் வரமுடியாமல் சிக்கினர். இதனால் கடந்த 10 நாட்களாக அவர்களை மீட்க மீட்பு படையினர் போராடி வருகின்றனர்.

அவர்களை மீட்க, முன்னதாக தோண்டப்பட்ட சுரங்கபாதையில் இடையில் பாறை இருந்தததால் மீட்பு பணி தடைபட்டது. இதற்கிடையில் சுரங்கத்தில் சிக்கி இருப்பவர்களுக்கு ஆக்சிஜன் மற்றும் உணவு பொருட்கள் ஆகியவை அனுப்ப சிறிய அளவிலான 6 அங்குல அகலமுடைய பைப் போடப்பட்டுள்ளது.

அதன் வழியாக தற்போது வரை ஆக்சிஜன், உலர் பழங்கள், தேவையான மருந்துகள் அனுப்பப்பட்டன. இதனை தொடர்ந்து தற்போது அந்த சிறிய அளவிலான பைப் மூலம் எண்டோஸ்கோபி கேமிராவை உள்ளே அனுப்பி அவர்களின் நிலையை கேமிரா வழியாக கண்டு தொடர்பு கொண்டுள்ளனர்.  சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களின் முதல் வீடியோ வெளியாகியுள்ளது.

இதனை தொடர்ந்து, அவர்களை மீட்கும் அடுத்தகட்ட நடவடிக்கையாக , சுரங்கத்திற்கு செங்குத்தாக இன்னொரு சுரங்கம் தோண்ட மீட்பு படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள், வீடியோ மூலம் , தாங்கள் நலமுடன் தைரியமாக உள்ளதாகவும் நீங்கள் (தொழிலாளர்களின் குடும்பத்தார்) யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும் கூறியதாக தகவல்கள் கிடைத்துள்ளன.