டாக்டர் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்..!

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் டாக்டர் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வருகின்ற ஜூலை 16ம் தேதி வெளியாகிவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் தற்பொழுது நடித்து வரும் திரைப்படம் டாக்டர், இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ளார், மேலும் இந்த படத்தில் மலையாள நடிகையான பிரியங்கா அருள் மோகன் ஹீரோயினாக அறிமுகமாகிறார். கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸூடன்    சிவகார்த்திகேயனும் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் யோகிபாபு, வினய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்திற்கு அனிருத் அவர்கள் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் ஸ்டில்ஸ் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில் தற்பொழுது இந்த படத்தின் முதல் பாடலை வருகின்ற 16ம் தேதி வெளியிடுவதாக படக்குழு தெரிவித்துள்ளது , அதற்கான சிறிய ப்ரோமோ விடியோவை நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார், இதனால் ரசிகர்கள் தற்பொழுது உற்சாகத்தில் உள்ளார்கள், மேலும் இந்த திரைப்படத்தில் ரிலீஸ் தேதிக்கான அப்டேட்யும் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.