மேற்கு வங்கத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறப்பு!

மேற்கு வங்க மாநிலத்தில் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுடன் இன்று 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் பள்ளிகள் கல்லூரிகள் அனைத்தும் பல மாதங்களாக மூடப்பட்ட நிலையிலேயே இருக்கிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் குறைந்து வரக்கூடிய பகுதிகளில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஒவ்வொன்றாக கட்டுப்பாடுகளுடன் திறப்பதற்கான வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டு இருந்தது. இருப்பினும் பல மாநிலங்களில் பள்ளிகள் திறக்கபிபடாமலேயே இருந்தது.

மேற்கு வங்கத்திலும் பள்ளிகள் மூடப்பட்ட நிலையிலேயே இருந்தது. இதனை அடுத்து இன்று மேற்கு வங்க மாநிலத்தில் 9 முதல் 12 வரையிலான வகுப்புகள் அனைத்தும் தொடங்கப்பட்டுள்ளன. பள்ளிக்கு வரக்கூடிய மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் பள்ளிகள் ஒவ்வொன்றிலும் உடல் வெப்பநிலை பரிசோதனை, சனிடைசர் வழங்குதல், சமூக இடைவெளி பின்பற்றுதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் மேற்கு வங்க மாநில அரசு வலியுறுத்தியுள்ளது.

Rebekal

Recent Posts

உங்க பிரிட்ஜில இந்த பொருள் எல்லாம் இருந்தா.. உடனே எடுத்துருங்க..!

குளிர்சாதன பெட்டி -குளிர்சாதன பெட்டியில் எந்த பொருட்களை எல்லாம் வைக்கக்கூடாது என இப்பதிவில்  காணலாம் . குளிர்சாதன பெட்டி : அனைவரது இல்லங்களிலும் ஒரு அவசியமான பொருள்…

9 mins ago

ஷூட்டிங்-ல எம்.ஜி.ஆரை பற்றி கேவலமாக பேசிய சந்திரபாபு! பிரபலம் சொன்ன சீக்ரெட்!

M.G.Ramachandran : படப்பிடிப்பு தளத்தில் அந்த காலத்தில் எம்.ஜி.ஆரை பற்றி சந்திரபாபு திட்டி பேசியதால் படமே பாதியில் நின்றுள்ளது. எம்.ஜி.ஆர் ஹீரோவாக படங்களில் நடித்து கொண்டு இருந்த…

1 hour ago

நாளை மாலை 6 மணி முதல் வாக்குப்பதிவு நாள் வரை… தேர்தல் விதிமுறைகள் வெளியீடு!

Election2024: நாளை மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்வு பெறும் நிலையில், பின்பற்றவேண்டிய தேர்தல் விதிமுறைகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில்…

1 hour ago

ட்வீட் செய்யவும் இனி காசு தான் ? எலான் மஸ்க் அதிரடி முடிவு !!

Elon Musk : X தளத்தில் இனி போஸ்ட் அல்லது ஏதேனும் போஸ்ட்க்கு ரிப்ளை, கமண்ட், புக்மார்க் போன்றவற்றை செய்வதற்கும் இனி பைசா கட்ட வேண்டும் என்று…

2 hours ago

மூத்த கன்னட நடிகர் துவாரகீஷ் மாரடைப்பால் காலமானார்.!

Dwarakish: மூத்த கன்னட நடிகரும் இயக்குனருமான துவாரகீஷ் மாரடைப்பால் இன்று காலமானார். 81 வயதான துவாரகிஷ், நீண்ட நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில், இன்று மறைந்துள்ளார்.…

2 hours ago

“அக்கா1825” என்ற பெயரில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் தமிழிசை!

Election2024: "அக்கா1825" என்ற பெயரில் தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் தமிழிசை சௌந்தரராஜன். தெலுங்கானா ஆளுநர், புதுச்சேரிதுணைநிலை ஆளுநர் பதவிகளை ராஜினாமா செய்த…

2 hours ago