முதல் இடத்தை பிடிக்கப்போவது நியூசிலாந்து அணியா ?ஆஸ்திரேலிய  அணியா ?!

இன்று இரண்டு போட்டிகள் நடைபெற பெற உள்ளது.அதில் முதல் போட்டியில் பாகிஸ்தான் Vs ஆப்கானிஸ்தான் அணிகள் மோத உள்ளது.இப்போட்டி லீட்ஸ்ஸில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் நடைபெற உள்ளது.இப்போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடக்க உள்ளது.
பாகிஸ்தான் அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 3 போட்டியில் வெற்றி , 3 போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. ஒரு போட்டி மழையால் ரத்தானது மொத்தம் 7 புள்ளிகள் பெற்று ஆறாவது இடத்தில் உள்ளது.
ஆப்கானிஸ்தான் விளையாடிய 7 போட்டிகளில் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை இதனால் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
இரண்டாவது  போட்டியில் நியூசிலாந்து vs ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளது. இப்போட்டி  லண்டனில்  உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.இப்போட்டி இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு தொடக்க உள்ளது.
நியூசிலாந்து அணி 7 போட்டிகளில்  5 போட்டியில்  வெற்றியும் , ஒரு போட்டி தோல்வியும் அடைந்து உள்ளது.ஒரு போட்டி மழையால் ரத்தானது. இதனால் புள்ளி பட்டியலில் 11 புள்ளிகள் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளது.
ஆஸ்திரேலிய  அணி 7 போட்டிகளில் விளையாடி ஆறு  போட்டியில் வெற்றியும் ஒரு தோல்வி அடைந்தது. புள்ளி பட்டியலில் 12 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது.

author avatar
murugan