தமிழகத்தில் இன்று முதல் விலையில்லா ரேஷன் பொருட்கள்.!

இந்த மாதத்திற்கான விலையில்லா ரேஷன் பொருட்கள் இன்று முதல் வழங்கப்படும்.

By murugan | Published: Jul 10, 2020 07:30 AM

இந்த மாதத்திற்கான விலையில்லா ரேஷன் பொருட்கள் இன்று முதல் வழங்கப்படும்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால், கொரோனா பரவலை தடுக்க சில தளர்வுகளுடன்  அடங்கிய ஊரடங்கு வருகின்ற 31-ம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து , தமிழகத்தில் ஜூலை மாதத்துக்கான விலையில்லா ரேஷன் பொருட்கள் வரும் 10 -ஆம் அதாவது (இன்று ) தேதி முதல் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த மாதத்திற்கான விலையில்லா ரேஷன் பொருட்கள் வாங்க கடந்த 6-ஆம் தேதி முதல் நேற்று (வியாழக்கிழமை) வரை டோக்கன் வழக்கப்பட்டது. இந்நிலையில், இன்று முதல் டோக்கனில் குறிப்பிட்டுள்ள தேதி மற்றும் நேரத்தின் அடிப்படையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகளில் சென்று விலையில்லா ரேஷன் பொருள்களை பெற்று கொள்ளலாம்.

Step2: Place in ads Display sections

unicc