#BREAKING: பட்டாசுகள் வழக்கு பிற்பகலுக்கு விசாரணை ஒத்திவைப்பு..! 

தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் தாக்கல் செய்த வழக்கின் விசாரணை பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைப்பு.

உச்சநீதிமன்ற உத்தரவுபடி தற்போது வரை தீபாவளிக்கு காலை 1 மணி நேரமும், மாலை 1 மணிநேரமும் நிபந்தனையுடன் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையெடுத்து, தீபாவளியன்று பட்டாசு வெடிக்கும் நேரத்தை அதிகரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் நேற்று தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில், பட்டாசு வெடிக்கும் நேரத்தை காலை 4 மணி நேரம் மாலை 4 மணி நேரம் என நீட்டித்து வழங்க வேண்டும். பசுமை பட்டாசு தயாரிக்கவும் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, பட்டாசு தயாரிப்பின்போது விதிமுறைகள் மீறுவதால் அப்பாவிகள் உயிரிழக்க நேரிடுகிறது. பட்டாசு வெடிக்க தடை விதித்திருப்பதால் பலர் வேலை இழந்திருக்கிறார்கள் என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.

ஆனால் ஒரு சிலர் பலருடைய ஆரோக்கியமாக வாழ அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமைகளை பறிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என நீதிபதிகள் கருத்து தெரிவித்து வழக்கின் விசாரணை பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைத்தனர்.

author avatar
murugan