தீபாவளியன்று 2 மணி நேரத்திற்கு மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி- ஆந்திரா அரசு உத்தரவு.!

தீபாவளியன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை பட்டாசு வெடிக்க ஆந்திரா அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 14ஆம் தேதி கொண்டாடவுள்ளனர் . இந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக கட்டுப்பாடுகளுடன் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் . தீபாவளி என்றாலே பட்டாசு தான் நினைவுக்கு வரும் . ஆனால் இந்தாண்டு கொரோனா பரவல் காரணமாகவும் ,ஒரு சில இடங்களில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு காரணமாகவும் பட்டாசுகளை விற்கவும் , வெடிக்கவும் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி ஆந்திரா மாநிலத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி , பட்டாசுகளை விற்பனை செய்வதற்கும், வெடிப்பதற்கும் பல கட்டுப்பாடுகளை விதித்துஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி மாநில தலைமை செயலாளர் நிலம் சாவ்னியின் ஒப்புதலின் படி , மாநில சுகாதார மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறையால் பிறப்பிக்கப்பட்ட ஆணையில் காற்று மாசுபாடு அதிகரித்து வரும் சூழலை கருத்தில் கொண்டு பச்சை பட்டாசுகளை மட்டுமே விற்பனை செய்ய அனுமதிக்கப்படும் என்றும், தீபாவளி தினத்தன்று இரவு 8 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிப்பதற்கும் ஆந்திரா அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.