எரிமலை வெடித்து சிதறியதால் காங்கோ நாட்டில் நெருப்புக்குழம்பு..!

காங்கோ நாட்டின் கிழக்கு பகுதியில் கோமா என்ற பெரிய வர்த்தக மற்றும் போக்குவரத்து நகரம் அமைந்துள்ளது. இந்த இடத்திற்கு அருகாமையில் மவுன்ட் நிரயகாங்கோ என்ற மிகப்பெரிய எரிமலை உள்ளது.

இந்த எரிமலை சீற்றத்துடன் காணப்பட்டதாக சில தினங்களுக்கு முன்பு அறியப்பட்டது. அதனால் எரிமலை வெடித்தவுடன் அருகில் வசித்து வந்த மக்களை வேறு பகுதிக்கு வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அங்கே அருகில் இருக்கும் அனைத்து நகரங்களுக்கும் தெரிவித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். வெளியேற்றப்பட்ட மக்களின் குடியிருப்பு பகுதிகளை நெருப்புக்குழம்பு சூழ்ந்து தற்போது அந்த இடங்கள் அனைத்தும் சாம்பலாகிவிட்டது.

உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளனர். மேலும், இதே போன்று இந்த எரிமலை வெடிப்பு 1997 மற்றும் 2002 யில் நிகழ்ந்துள்ளது. 2002 ஆம் ஆண்டு நிகழ்ந்த இந்த சம்பவத்தில் 100 க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். அதிலும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் தங்கும் வீட்டை இழந்து தவித்துள்ளனர். அதன் பிறகு இந்த நிரயகாங்கோ எரிமலை தற்போது வெடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.