திருச்சியில் இருந்து குஜராத் சென்ற ஹம்சாபர் எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. திருச்சிராப்பள்ளியில் இருந்து ஸ்ரீ கங்கா நகர் வரை செல்லக்கூடிய ஹம்சபர் எக்ஸ்பிரஸ் ரயில் ஆனது வல்சாத் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது
இந்த விபத்து ஆனது சூரத்தில் இருந்து 25 கிமீ தொலைவில் இந்த விபத்து நடந்துள்ளது. ரயிலில் உள்ள ஒரு பெட்டியில் தீ ஏற்பட்டதையடுத்து அபாய ஒலியானது ஒலிக்கப்பட்டு, ரயில் அந்த பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது. அச்சமடைந்த பயணிகள் அனைவரும் உடனடியாக ரயிலை விட்டு கீழே இறங்கி உள்ளனர். இதனால் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை.
இந்த விபத்து குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கிடைக்கப்பட்டதும், உடனே வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தீ விபத்து குறித்த காரணங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை அதற்கான காரணங்களை கண்டறிய காவல்துறையினரும் ரயில்வே அதிகாரிகளும் ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும் இதற்கு முன்னதாக, மதுரை ரயில் நிலையத்தில் இருந்து 1 கிமீ தூரத்தில் மற்றொரு ரயிலுடன் இணைக்க நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுற்றுலா விரைவு ரயில் பெட்டியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.