ஆன்லைனில் விற்கும் பொருட்கள் எந்த நாடு என குறிப்பிடாவிட்டால் 1 லட்சம் அபராதம் , ஒரு வருடம் சிறை – ராம்விலாஸ் பாஸ்வான்.!

லடாக் எல்லையில் இந்திய-சீன ராணுவ வீரர்கள்  இடையில் நடைபெற்ற தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதல் எதிரொலியாக சமூகவலைதளங்களில் இந்தியர்கள் சீனாவிற்கு எதிராக கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

மேலும், சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் போன்ற குரல்கள் மேலோங்கின. இதையடுத்து டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு தடை என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்தியாவின் ஆன்லைன் விற்பனை நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஒரு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதாவது, இ-காமர்ஸ் நிறுவனங்கள் தங்கள் இணையதளத்தில் விற்கப்படும் பொருட்கள் எந்த நாட்டில் தயாரிக்கப்படுகிறது (Country of origin) என்பது குறித்து தெரிவிக்கவேண்டும் என கூறியது. இந்த விதியை ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் பின்பற்றுமாறு வர்த்தக அமைச்சகம் இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு கூறியது. இதைத் தொடந்து, இந்த விதியைப் பின்பற்ற இ-காமர்ஸ் நிறுவனங்கள் சிறிது கால அவகாசம் கோரி மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியது.

இந்நிலையில், இணையதளத்தில் விற்கப்படும் பொருட்கள் எந்த நாட்டில் தயாரிக்கப்படுகிறது என இ-காமர்ஸ் நிறுவனங்கள் தெரிவிக்காவிட்டால் ரூ .25,000 முதல் 1 லட்சம் வரை அபராதம் மற்றும்  ஒரு வருடம் சிறைத்தண்டனை விதிக்கக்கூடும் என்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான்  தெரிவித்துள்ளார்.

author avatar
murugan