இறுதிக்கட்ட படப்பிடிப்பில் பிசாசு 2..! விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பு.?

ஆண்ட்ரியா நடித்து வரும் பிசாசு இரண்டாம் பாகத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் கடந்த 2011ம் ஆண்டு வெளியான பிசாசு திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இயக்குனர் மிஷ்கின் பிசாசு இரண்டாம் பாகத்தை தற்போது இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை ஆண்ட்ரியா நடிக்கிறார். மேலும் முதன் முதலாக இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா மிஸ்கின் திரைப்படத்திற்காக இசையமைக்கிறார். படத்தில் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.

இந்த திரைப்படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், தற்போது கிடைத்த தகவல் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், அடுத்த மாதம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படுவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.