இன்று தொடங்குகிறது காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்…!

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது.

அக்.17-ஆம் தேதி நடைபெற உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் உள்ளது. இந்த தேர்தலுக்கான அட்டவணையை நேற்று முன்தினம் காங்கிரஸ் தேர்தல் குழு தலைவர் வெளியிட்டுள்ளார். அதன்படி, காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

 மேலும், வேட்புமனுக்களை திரும்ப பெற அக்.8-ஆம் தேதி கடைசி நாள், அன்றைய தினமே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். இன்று வேட்புமனுத்தாக்கல் தொடங்கவுள்ள  நிலையில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடப்போவதாக நேற்று ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment