வந்தே பாரத் திட்டம் மூலம் நாடு திரும்பிய ஐம்பதாயிரம் இந்தியர்கள்!

வந்தே பாரத் திட்டம் மூலம் நாடு திரும்பிய ஐம்பதாயிரம் இந்தியர்கள். இந்தியா

By leena | Published: Jun 01, 2020 02:28 PM

வந்தே பாரத் திட்டம் மூலம் நாடு திரும்பிய ஐம்பதாயிரம் இந்தியர்கள்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் வெளிநாடுகளிலும், வெளி மாநிலங்களிலும் உள்ளவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப இயலாமல் தவித்து வந்தனர். 

இந்நிலையில், தற்போது 5-ம் கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மே-6ம் தேதி முதல் வந்தே பாரத் திட்டம் தொடங்கப்பட்டு, வெளி நாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வந்தே பாரத் திட்டத்தின் மூலம் இதுவரை ஐம்பதாயிரம் இந்தியர்கள் நாடு திரும்பி உள்ளதாகவும், மே 31 ஆம் தேதி அன்று மட்டும்  3,564 இந்தியர்கள் நாடு திரும்பிய உள்ளதாகவும், மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்திப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

Step2: Place in ads Display sections

unicc