கருவளர்ச்சி குறைபாடு – சிறப்பு திட்டத்தை தொடக்கி வைத்த முதலமைச்சர்!

ஓமந்தூரார் மருத்துவமனையில் தாய், சேய் நல தொகுப்பு திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

நாட்டிலேயே அரசு மருத்துவமனைகளில் முதன் முறையாக சிசு குறைபாடுகளை கருவிலேயே கண்டறியும் சிறப்பு திட்டத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடக்கி வைத்தார். சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கருவளர்ச்சி குறைபாட்டை கண்டறியும் சிறப்பு திட்டத்தை முதல்வர் இன்று தொடங்கி வைத்தார். கருவுற்ற 3 மாதத்தில் சிசு குறைபாடுகளை கண்டறிந்து சரிசெய்ய சிகிச்சையளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

மேலும், ஓமந்தூரார் அரசினர் தோட்டம், தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மாநில சுகாதாரப் பேரவையை அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்