வெயிலில் சருமத்தை பாதுகாக்கும் வெந்தய பேஸ் பேக்

  • வெயிலில் சருமத்தை பாதுகாக்கும் வெந்தய பேஸ் பேக்.

கோடைகாலம் வந்துவிட்டாலே பலருக்கு தானாக பயம் வந்து விடுகிறது. ஏனென்றால், அக்காலத்தில் சருமத்தில் பல பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. சரும தோள்கள் மிகவும் மென்மையானது.

Related image

கோடைகாலத்தில், சுட்டெரிக்கும் வயிலில் வெளியில் சென்றால், தீ பட்ட சணல் எவ்வாறு எரிந்து விடுகிறதோ, அது போல தான் நமது சருமமும். மென்மையான தோல்களை கொண்டிருப்பதால், வெயிலில் வெளியில் செல்லும் போது, பல சரும பிரச்சனைகள் ஏற்படுகிறது.

 சருமதுளை அடைப்பு

Image result for முகத்தில் உள்ள துளைகள்

தேவையானவை

  • வெந்தயம்
  • பால்

நமது சருமத்திற்கு வெந்தயம் சிறந்த கிளின்சராகவும் செயல்படுகிறது. தினமும் வெந்தயத்தை பாலுடன் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் முகத்தில் தடவி மென்மையாக 15 நிமிடம் மசாஜ் செய்து பின் கழுவ வேண்டும்.

இதனைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், சருமத்துளைகளில் ஏற்பட்டுள்ள அடைப்புக்கள் அனைத்தும் நீங்கி சருமம் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.

 கருமை நீங்க

Image result for கருமை நீங்க

தேவையானவை

  • வெந்தயம்
  • பால்
  • தண்ணீர்

வெந்தயத்தை நீரில் ஊற வைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் பால் சேர்த்து கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும்.

இதனை வாரம் இருமுறை செய்து வந்தால், வெயில் காலத்தில் வெளியில் சென்று வந்த பின் சருமம் கருமை அடைவதை தடுக்கலாம்.

பருக்கள்

Image result for பருக்கள்

 

 

தேவையானவை

  • வெந்தயப்பொடி
  • தயிர்

வெந்தய பொடியை தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், முகத்தில் உள்ள பருக்கள் நீங்கி, நிறம் அதிகரிக்கும்.

ஆனால், வெந்தயம் குளிர்ச்சிமிக்கது. எனவே, சுவாச பிரச்சனைகள் இருப்பவர்கள் இதனை வாரம் 2 முறை போடுவது நல்லது.

கை கால் கருமை

Image result for கை கால் கருமை

 

தேவையானவை

  • தண்ணீர்
  • வெந்தயம்

வெயிலில் சருமத்தின் நிறம் கருமை நிறத்தில் மாற்றமடைந்திருந்தால், அதனை வெந்தயத்தைக் கொண்டு எளிதில் நீக்கலாம். அதற்கு 1/2 கப் வெந்தயத்தை நீரில் போட்டு கொதிக்க விட்டு, அந்நீரை குளிர வைத்து பின் அதனைக் கொண்டு தினமும் இரவில் படுக்கும் முன் முகம் கை, கால்களில் தடவி, மறுநாள் காலையில் கழுவ வேண்டும்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment