டிரம்ப் மீது முத்த புகார் கொடுத்த பெண் பத்திரிக்கையாளர்.!

டிரம்ப் மீது முத்த புகார் கொடுத்த பெண் பத்திரிக்கையாளர்.!

  • அமெரிக்காவில் புகழ்பெற்ற “பாக்ஸ் நியூஸ்” தொடலைக்காட்சியில் செய்தியாளராக உள்ளவர் கர்ட்னி.
  • இவர் ட்ரம்பிடம் தொலைபேசியில்  பேசிய போது இருவரும் முத்தமிடலாம் என ட்ரம் கூறியதாக புகார் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் புகழ்பெற்ற “பாக்ஸ் நியூஸ்” தொடலைக்காட்சியில் செய்தியாளராக உள்ளவர் கர்ட்னி பிரையல். இவர் சமீபத்தில் அதிபர் ட்ரம்  மீது முத்த புகாரை கொடுத்து உள்ளார்.இந்த புகார் அமெரிக்கா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

கர்ட்னி தன்னுடைய செய்தியாளர் அனுபவங்களை தொகுத்து”டுநைட் அட் 10″ என்ற புத்தகம் ஒன்றை எழுதி உள்ளார்.அந்த புத்தகத்தில் ட்ரம்ப் அதிபர் பதவிக்கு வருவதற்கு முன்பாக   அழகிப் போட்டி நடத்தி வந்து உள்ளார்.

அந்த அழகி போட்டியில் நடுவராக கலந்துகொள்வது குறித்து ட்ரம்பிடம் தொலைபேசியில்  பேசியது குறித்து அந்த புத்தகத்தில் கூறியுள்ளார். அந்த உரையாடலில் தன்னை அலுவலகத்திற்கு வருமாறு அழைத்த ட்ரம்ப்  இருவரும் முத்தமிடலாம் என கூறியதாகவும் , அவரின் அழைப்பை தான் நிராகரித்துவிட்டதாகவும் அந்த புத்தகத்தில் கர்ட்னி கூறியுள்ளார்.

கர்ட்னி புகார் குறித்து ட்ரம்ப் தரப்பில் இருந்து உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. கடந்த 2016-ம் ஆண்டு அதிபர் தேர்தலில்  ட்ரம்ப் போட்டியிட்ட போது அவர் மீது ஆபாச படநடிகை ஸ்டீபனி கிளிஃபோர்ட் மற்றும் பலர் பாலியல் புகார்களை கொடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan
Join our channel google news Youtube