கல்லூரிகளில் இடை நின்ற மாணவர்களுக்கு கட்டணத்தை திருப்பி தரவேண்டும்.! – யுஜிசி அதிரடி உத்தரவு.!

சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் தாமதமாக வந்ததால்  கல்லூரிகளை மாற்றிய மாணவர்களுக்கு அவர்கள் முதலில் சேர்ந்த கல்லூரிகளில் மாணவர்கள் செலுத்திய கட்டணத்தை அந்ததந்த கல்லூரிகள் திருப்பி தரவேண்டும் என யுஜிசி உத்தரவிட்டுள்ளது. 

இந்த வருடம் சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் தாமதமாக வெளியிட பட்டதாலும், நீட், ஜே.இ.இ தேர்வு முடிவுகள் காரணமாக பல்வேறு கல்லூரிகளில் மாணவர்கள் முன்கூட்டியே சேர்ந்துவிட்டனர். பின்னர் முடிவுகள் தெரிந்த பின்னர் அவர்கள் தங்கள் படிப்புகளை மாற்றும் நிலை வந்தது.

இதனால், கல்லூரியில் இடைநின்ற மாணவர்களுக்கு அவர்கள் செலுத்திய கட்டணத்தை திருப்பி தரவேண்டும் என பல்கலை கழக மானிய குழுவான யுஜிசி அறிவித்துள்ளது.

அந்தந்த மாணவர்களின் பெற்றோர்கள் பொருளாதர நிலைமையை கருத்தில் கொண்டு மாணவர்கள் செலுத்திய கட்டணத்தை திருப்பி தரவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனை கல்லூரி முதல்வர்கள் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் யுஜிசி அறிவித்துள்ளது.

Leave a Comment