பப்ஜிக்கு நிரந்தர தடை விதித்து மத்திய அரசு அதிரடி!

பப்ஜிக்கு நிரந்தர தடை விதித்து மத்திய அரசு அதிரடி!

இன்று முதல் பப்ஜிக்கு நிரந்தர தடை விதித்து மத்திய அரசு உத்தரவு.

இந்தியா – சீனா இடையில் ஏற்பட்ட மோதலால், மத்திய அரசு இந்தியாவில், டிக்டாக் செயலி உட்பட 59 சீன செயலிகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்தியாவில் இருந்து இந்த செயலிகள் மூலம் தகவல்கள் திருடப்படுவதால், அவற்றை பாதுகாக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

மேலும், செப்.2-ம் தேதி முதல், மத்திய அரசு பப்ஜி கேம் என்ற ஆன்லைன் கேம் உட்பட, 118 சீன செயலிகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இந்தியாவை பொறுத்தவரையில், இளைஞர்கள் பலரும் இந்த பப்ஜி கேமிற்கு அடிமையானது மட்டுமில்லாமல், இந்த கேமால் பல உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது.

இந்த ஆன்லைன் விளையாட்டால், பல சர்ச்சைகள் எழுந்தது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகளும் தொடரப்பட்ட நிலையில், மத்திய அரசு விதித்த தடை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து, தடை செய்யப்பட்ட செயலிகளை, மொபைல் செயலிகள் தரவிறக்கம் செய்யும் கூகுள் பிளே ஸ்டார் மற்றும் ஆப்பிள் ஸ்டோரில் இருந்து அந்நிறுவனம் அகற்றியது.

 ஆனால், இந்த பப்ஜி கேமை, ஏற்கனவே மொபைலில் தரவிறக்கம் செய்தவர்கள், இந்த செயலியை பயன்படுத்தி வந்தனர். தற்போது, அவர்களும் இந்த செயலியை பயன்படுத்த இயலாதவாறு மத்திய அரசு தடை செய்துள்ளது. இந்த நிரந்தர தடையானது பப்ஜி பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube