சென்னையை விட்டுச் செல்லும் பயம் இனிமேல் ஏற்படாது – அமைச்சர் பாண்டியராஜன்

சென்னையில் கொரோனா நாளுக்கு நாள் தனது ஆக்கிரமிப்பை கொண்டுள்ளது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 47,650 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் அங்கு இதுவரை 27,986 பேர் வீடு திரும்பியுள்ளனர். மேலும், 18,969 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.தற்போது ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சென்னையில் உள்ள மக்கள் அனைவரும் தங்களுது சொந்த ஊருக்கு படையெடுத்து போனதை அனைவரும் பார்த்தோம்.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் பாண்டியராஜன் கூறுகையில் சென்னையை விட்டுச் சென்று விட வேண்டுமென அச்சம் இனிமேல் மக்களுக்கு வராது.

அத்தியாவசியதிற்காக மக்கள் சென்னையை விட்டுச் செல்கிறார்கள் என்பதில் லாஜிக் இல்லை. மக்கள் பயப்படாமல் சோதனைக்கு வந்தாலே கொரோனா நோயிலிருந்து முழுமையாக மீண்டு குணமடைய முடியும் என அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.