100 சதவீத அந்நிய முதலீட்டுக்கு கட்டுமானத் துறையில் அனுமதி!

பல்வேறு துறைகளில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையில், அன்னிய நேரடி முதலீடு தொடர்பான கொள்கைகளை மறுபரிசீலனை செய்த மத்திய அமைச்சரவை, ஒற்றை பிராண்ட் சில்லறை வர்த்தகத்தில் 100 சதவீதம் வரை அன்னிய முதலீட்டை மேற்கொள்ள இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.
ஒற்றை பிராண்ட் சில்லறை வர்த்தகத்துக்கு காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 49 சதவீத அன்னிய முதலீட்டுக்கு அனுமதியளிக்கப்பட்ட நிலையில், தற்போது 100 சதவீத அன்னிய முதலீட்டுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், கட்டுமானத்துறையிலும் 100 சதவீத அன்னிய முதலீட்டுக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் தந்துள்ளது.
ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார் மயமாக்க மத்திய அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில், அந்நிறுவனத்தில் வெளிநாட்டு விமான நிறுவனங்கள் 49 சதவீதம் வரை முதலீடு செய்யவும் மத்திய அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. இதனால், ஏர் இந்தியா நிறுவனத்தில் அன்னிய முதலீட்டுக்கான ஏலம் விரைவில் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
source: dinasuvadu.com

Leave a Comment