தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே..! தாயுமானவனை தாலாட்டும் நாள்

இன்று தந்தையர் தினம் அன்னை ஒரு தெய்வம் என்றால் அந்த தெய்வத்தை காக்கும் ஆலயம் தந்தை பத்து மாதம் தாய் வயிற்றில் சுமக்கிறாள் என்றால் தந்தை நெஞ்சில் சுமப்பவர்.
Related image
உறவுகளில் எத்தனை உறவுகள் இருந்தாலும் தந்தை உறவை போல ஒரு உறவை விட உயர்வானது ஏதும் உண்டா..?தாய் தன்னுடைய குழந்தைக்காக தனது ஆசைகளை துறக்கிறாள் என்றால் தந்தை தனது வாழ்க்கையையே துறக்கிறார்.
தன் குழந்தையை கையில் ஏந்திய அந்த தருனம் முதல் தந்தை ஒரு பொறுப்பான ஆளாக மாறுகிறார் என்பது கண் முன் காட்சி
தன் குழந்தையின் கனவு , ஆசை தனது தகுதி மீறியதாக இருந்தாலும் அதனை தன் குழந்தைக்காக வசப்படுத்தி கொடுப்பவர்.தனக்கு வேண்டியதை கேட்ட உடனே கொடுப்பவர் கடவுள் என்று கூறினால் அது என் தந்தை தான் என்று உள் மனதில் வார்த்தைகள் ஓடி வந்து கூறுகின்றது.பெண் குழந்தைக்கு தன் முதல் ஆண் நண்பன் மற்றும் தான் சந்தித்த முதல் ஆண் வர்க்கம் என்றால் அது அப்பா அவர் தான் என் வாழ்வில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு என்று எத்தனை மகள்கள் மகிழ்கின்றனர்.
Related image
ஆண் பிள்ளைகளை பொருத்தவரை அப்பா என்பவர் தன்னை கண்கானிப்பவர் என்பார்கள் ஆம் தன் மகன் தனக்கு பின்னால் அவன் குடும்பத்தை கட்டுக்கோப்பாக கவனிக்க வேண்டும் என்று கண்காணிப்பவராக இருப்பார்
Related image
அம்மாவின் கண்ணீர் கூட  கல்லை கரைத்து விடும் ஆனால் அப்பா கலங்காமல் கல்லாய்  இருப்பார் இது அவருக்கே உரிய தனி குணம் இங்கு எத்தனை பேர் தங்களது அப்பாவின் கண்ணீரை பார்த்தோம் என்றால் குறைவு தான் காரணம் தன் பிள்ளைகளின் முன் அவர் நம்பிக்கை இழந்து காணப்படுவதை விரும்ப மாட்டார்.தன் குழந்தை தைரியமான,ஒழுக்கமாக வளர வேண்டும் என்று தன் பாசத்தை உள்ளே வைத்து கொண்டு வெளியே எங்கே நாம் செல்லம் கொடுத்தால் அது எல்லை மீறி போய் விடுமோ என்று பார்த்து நடந்து கொள்பவர்.
Image result for father relationship
இன்னும் சொல்ல வேண்டும் அப்பாவின் கண்ணீர் எப்பொழுது  என்றால் தனது பெண் குழந்தையை கட்டி கொடுத்து மாப்பிள்ளை விட்டுக்கு அனுப்பும் போது தன்னை அறியாமல் சிறு குழந்தை போல கதறி அழுவார்.
Image result for தந்தை மகள்
அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும் பாசமும் , வலியும்  என்ன வென்று..!
மகளை பொருத்தவரை அப்பா – தனது மனைவி பேச்சை கேட்கிறாரோ இல்லையோ ஆனால் மகளின் பேச்சை கேட்காத தந்தை இருக்க முடியாது .மகளின் பிரச்சனையை முதலில் தீர்க்க துடிக்கும் முதல் இதயம் அப்பா மட்டுமே
தன் மகளை சாமியாக நினைப்பது அப்பாக்கள் மட்டுமே..!கூப்பிடும் போதே சாமி என்னய்யா..? என்பார் அதை கோடி கொடுத்தாலும் வாங்க முடியாது.ஆயிரம் தவறுகள் செய்தாலும் தந்தைக்கு தன் மகள் இளவரசி தான்
பெண் பிள்ளைகள் தன் தந்தையின் மீது அதிக அன்பு வைக்க காரணம் தன்னை ஏமாற்ற நினைக்காத ஒரே ஆண் தந்தை என்பதால்
ஒரு பெண் குழந்தைக்கு அம்மா 15 வயதிற்கு பிறகு உணவு ஊட்டி விட்டு அம்மா கூறுவாள் நீ என்ன இன்னும் சின்ன பிள்ளையா..?என்று
அதே தந்தை ஊட்டி விட்டு கூறுவார் நீ எப்பவும் எனக்கும் குழந்தை மா.!
எத்தனை பேர் நான் இருக்கிறேன் உனக்கு என்று கூறினாலும் என் அப்பாவின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்று அழுத்தமாக கூறுவதற்கு பெண்கள் தயங்குவது இல்லை

ஒரு மகள் தன் தந்தைக்கு எழுதிய கவிதை 🙂

” உன் மீசையாலேயே காண்போரை மிரட்டிவிடுவாய்

உன் மீசையில் மண்  தடவி விளையாடும் என்

பிஞ்சு கைகளை  கொஞ்சுகிறாய்

நீ தோற்று விட்டாயே நான் வெல்வதற்கு “

 
Related image

மகனை  பொருத்தவரை அப்பா :

தந்தையின் கடல் அளவு கோபம் கூட  அடங்கி விடுகிறது தன் செல்ல மகனின் ஒரு துளி கண்ணீரில்
மகனை கஷ்டங்களே தெரியாமல் வளர்ப்பவர் அப்பா என்றால்
மகனை கஷ்டங்களை சந்திக்கவிட்டு எதிர்கொள்ள துணை நிற்பவர் தான் மிக சிறந்த அப்பா என்றுமே மகனிற்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக இருப்பவர்.
எதிர்காலத்தை அமைத்து கொடுக்கும் தீர்க்கதரிசி என்றால் அது அப்பா மட்டுமே.
ஒரு மகன் அப்பா என்ற அந்தஸ்தை பெறும் பொழுது தான் தன் அப்பாவின் தியாகத்தை உணர்கிறான்

ஒரு மகன் தன் தந்தைக்கு எழுதிய கவிதை 🙂

“நான் பிறந்த போது என் பெயரின் பின்னால் வரும்

முதல் எழுத்து நீதான் என்று என் வாழ்க்கையை

அழகாக மாற்றி கொடுத்து என்னை நல்லபடியாக கரை

சேர்த்து என் பின்னால் நிற்பதும் நீ மட்டும் தான்

அப்பா என்னும் என் தெய்வம்”

இப்படி தன் வாழ் முழுவதும் தன் மனைவிக்கு பிடித்தது ,தன் மகனுக்கு பிடித்தது,தன் மகளுக்கு பிடித்தது என்று பார்த்து பார்த்து செய்யும் அப்பாவிற்கு தனக்கு பிடித்தை அங்கே மறந்து விடுகிறார்.
நமக்கு எத்தனை வயது ஆக்கினாலும் அவருடைய பார்வையில் நாம் குழந்தைகளே அப்படிப்பட்ட உன்னத தெய்வத்தை கடைசி காலக்கட்டத்தில் முதியோர் இல்லம் என்ற இடத்தில் கொண்டு போய் விட எவ்வாறு மனம் வருகிறது என்று தெரியவில்லை.வாழ்நாள் முழுவதும் உழைக்கும் அந்த கரங்களை கடைசி வரை இறுக பற்றாமல் நமக்காக ஓடி ஓடி உழைத்த பாதம் இன்று எத்தனை தெருக்களில் யாரும் இல்லாமல்  அலைந்து கொண்டிருப்பதை பார்க்கும் பொழுது நெஞ்சு பொறுக்கவில்லையே
Image result for முதியோர் இல்லம்

கடைசி காலக்கட்டத்தில் தன் மகனுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார் தந்தை :
அதிலும் தன் மகனுக்கு வழிகாட்டியாக இருக்கிறார்.

“என்னை போலவே நீயும் உன் மகனை

கண்மூடித்தனமாக நம்பி விடாதே

விளைவில் நீயும் முதியோர் இல்லத்தை

நாடி வந்து விடுவாய் “

ஏத்துனை ஒரு உருக்கமான கவிதை கடைசி வரைக்கும் தன் குழந்தையின் வாழ்க்கையை கட்டமைக்கும் கட்டமைப்பாளர் ஆக தந்தை உள்ளார்.எத்தனை வேலைகள் தன் வாழ நாளில் இருந்தாலும் அத்துனைக்கும் மத்தியிலும் தன் குழந்தையை கொஞ்சி செல்வதை அவர் மறந்ததே இல்லை ஆனால் இன்று தன் தந்தையை மறந்து எத்தனை பேர் உள்ளனர் என்பதை உங்கள் கவனத்திற்கே விட்டு விடுகிறேன்
Related image
நாம் பிறக்கும் பொழுது நம்மை அவர் சுமையாக கருதவில்லை சுகமாகவே கருதினார் ஆனால் ஏனோ தாய் – தந்தை வயதானால் மட்டும் நாம் ஏன் சுமையாக கருதுகிறோம் என்று தெரியவில்லை..?
Related image
வயதானால் எல்லாருடைய தந்தையும் குழந்தையாக மாறிவிடுகிறார்.நம்மை வளர்த்த தாய் -தந்தையை குழந்தையாக பாவிக்க நமக்கு ஒரு தருணம் தான் அவர்களின் முதுமை பருவம்  இந்த பருவத்தில் தாய் -தந்தையை அருகில் வைத்து அவர்களை  நாம் பாதுகாப்போம்.
“தெய்வங்கள் எல்லாம் தோற்றேப்போகும் தந்தை அன்பின் முன்னே “ அனைவருக்கும் தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

author avatar
kavitha