#Breaking: தந்தை-மகன் மரணம்.. எஸ்.ஐ. ரகு கணேஷ் கைது!

சாத்தான்குளத்தை சார்ந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ-க்கு மாற்றப்பட்டுள்ளதால் அவர்கள் விசாரணையை தொடங்கும் வரை இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

இதனால், இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் 3 குழுக்களாக பிரிந்து சென்று இன்று காலை முதல் ஜெயராஜ் வீடு, கடை மற்றும் சாத்தான்குளம் காவல்நிலையத்தில்  தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில், தந்தை, மகன் இறந்த வழக்கை 302 (கொலை) பிரிவு உட்பட நான்கு பிரிவுகளின் கீழ், சி.பி.சி.ஐ.டி பதிவு செய்தது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக, எஸ்.ஐ. ரகு கணேஸை சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்தனர்.