,

79 வினாடிகளில் அதிவேக கோல்..! மெஸ்ஸி படைத்த அசத்தல் சாதனை..!

By

Messi fastest goal

அர்ஜென்டினா நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி சர்வதேச போட்டியில் அதிவேக கோலை அடித்து சாதனை படைத்துள்ளார்.

அர்ஜென்டினா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான நட்பு ரீதியான கால்பந்து போட்டி நேற்று நடைபெற்றது. சீனாவின் பெய்ஜிங்கில் உள்ள ஒர்க்கர்ஸ் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் அர்ஜென்டினா நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி தனது அதிவேக கோலை அடித்து ரசிகர்களை பிரம்மிப்பில் ஆழ்த்தினார்.

லியோனல் மெஸ்ஸி அர்ஜென்டினா அணிக்காக தனது முதல் கோலை, போட்டி தொடங்கிய 79 வினாடிகளில் அடித்து சாதனை படைத்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த போட்டியில் 2-0 என்ற கோல்கள் என்ற கணக்கில் அர்ஜென்டினா அணி ஆஸ்திரேலியாவை வென்றது.

இந்த சீசனில் அர்ஜென்டினா அணிக்காக மெஸ்ஸி, 13 போட்டிகளில் விளையாடியும் அதில் 17 கோல்களை அடித்தும் உள்ளார். இதற்கிடையில், லியோனல் மெஸ்ஸி பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் கிளப் உடனான ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததையடுத்து, அமெரிக்காவின் இன்டர் மியாமி கிளப்பில் இணைய உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.