இன்று முதல் கட்டாயமாகிறது FASTag முறை.! மத்திய அரசு உத்தரவு.!

இன்று முதல் கட்டாயமாகிறது FASTag முறை.! மத்திய அரசு உத்தரவு.!

  • நாடு முழுவதும் இன்று முதல் கட்டாயமாகிறது FASTag முறை மத்திய அரசு அறிவிப்பு.
  • FASTag பெறாமல், பணமாக செலுத்தினால், இன்று முதல் இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும்.

சுங்கச்சாவடிகளில் வாகன நெரிலை கட்டுப்படுத்தவும், வாகன ஓட்டிகள் எளிதாக சுங்க கட்டணங்களை செலுத்துதல் போன்றவைகளுக்கான FASTag முறையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இத்திட்டம் இன்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது. எனவே வாகன ஓட்டிகள் FASTag கார்டை முறையாக பெற்று வாகனத்தில் ஒட்டிக்கொள்ள வேண்டும்.

இந்நிலையில், சுங்கச்சாவடி வழித்தடத்தில் வாகனம் செல்லும் போது தடுப்புக் கம்பிக்கு மேல் உள்ள ஸ்கேனர், வாகனத்தில் உள்ள கார்டை ஸ்கேன் செய்து, சுங்க கட்டணத்தை ஆன்லைன் மூலம் டெபிட் செய்து கொள்ளும். பின்னர் FASTag பெறாமல், பணமாக செலுத்தினால், இன்று முதல் இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கார்டை அனைத்து சுங்கச்சாவடியிலும் வாங்கிக் கொள்ளலாம். இதற்காக பாஸ்டேக் கார்டுகள் சில ஏஜென்ஸிகள் மூலமாக விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இங்கு பெற்று ஆக்டிவேட் செய்து கொள்ளலாம். ஆன்லைனிலும் இதற்கான விண்ணப்பம் உள்ளது. அதையும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ள முடியும். பிறகு வங்கியின் மூலமாக முன்னரே பணம் செலுத்தி ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டும்.

இதை ஆக்டிவேட் செய்வதற்கு வாகனத்தின் ஆர்சி புக், உரிமையாளரின் போட்டோ, லைசென்ஸ், பான் கார்டு விபரங்கள் கேஓய்சி படிவமாக இருக்க வேண்டும். பாஸ்டேக் வாடிக்கையாளர்கள் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பாங்கிங் உள்ளிட்ட ஆன்லைன் சேவைகள் மூலமாகவும் பணத்தை செலுத்தி ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். பிறகு அந்த கார்டை தமது வாகனத்தில் உள்ள கண்ணாடியில் பொருத்திக் கொள்ள வேண்டும்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube