விவசாயிகள் பயிர் காப்பீடு பிரீமியம் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் – ஜி கே வாசன்!

டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு பிரீமியம் தொகையை செலுத்துவதற்கான கால அவகாசத்தை அரசு நீட்டித்து தர வேண்டும் என்று மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் அவர்கள் கூறியுள்ளார்.

விவசாயிகளின் டெல்டா மாவட்ட விவசாயிகளின் பயிர் காப்பீடு பிரீமியம் செலுத்தும் தொகை கால அவகாசம் குறித்து தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரியிலிருந்து ஆண்டு ஜூன் மாதம் 12ஆம் தேதி குறிப்பிட்ட காலத்தில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இயற்கையின் ஒத்துழைப்பாலும் அரசின் முன்னேற்ற முன்னேற்பாடும் தண்ணீர் வழிதடங்கள் தூர்வாரப்பட்டு குறித்த நேரத்தில் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் சென்று குறுவை சாகுபடி உடனடியாக துவங்க முடிந்தது. இந்நிலையில் காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு பதினோரு ஆண்டுகளுக்குப் பிறகு குறிப்பிட்ட காலத்தில் தண்ணீர் வந்தது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

கொரோனா காலகட்டத்தில் விவசாயிகள் நிர்ணயிக்கப்பட்ட மூன்று லட்சம் ஏக்கர் தாண்டி ஒரு லட்சம் ஏக்கருக்கு அதிகமாக சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளனர். இதுவரை 1.63 லட்சம் ஏக்கருக்கு தான் பயிர் காப்பீடு தொகை செலுத்தி உள்ளனர் மீதம் 1.50 லட்சம் ஏக்கருக்கு மேல் பயிர் காப்பீடு செலுத்த முடியவில்லை. ஆகவே காப்பீடு பிரீமியம் தொகை செலுத்தும் தேதியை இன்னும் 15 நாட்கள் நீட்டித்து தரும்படி கேட்டுக் கொள்கிறேன். குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அனைவரும் பயிர் காப்பீடு தொகை செலுத்த கால அவகாசம் வழங்குமாறு 2019 – 2020 ஆம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு இழப்புத் தொகையை உடனடியாக வழங்குமாறும், தமிழக அரசை தமிழ்நாடு மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக் கொள்கிறேன் என ஜி கே வாசன் தெரிவித்துள்ளார்.

author avatar
Rebekal